March 22, 2010

Nigeria & India

I have often quoted Jeyamohan in this blog. But this time, When I read this blog post of his [warning: has disturbing picture], I wanted to bang myself. A reader asks him abt the violence in Nigeria and our man comes out with a terrific theory. Like India, Nigeria too was made up of different races, ancient culture but with the advent of Islam, violence had started. There is a huge following for him which believes every letter he writes and this type of irresponsible reply should be condemned.

"இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது. அதுவும் இந்தியாவைப்போலவே.
...
இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது. எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.
...
அதன்பின் நைஜீரியாவில் காலனியாதிக்க காலகட்டம். இந்தியாவைப்போலவே முதலில் போர்ச்சுக்கல்காரர்கள். கடைசியில் பிரிட்டிஷார். இஸ்லாமாகாமல் எஞ்சிய மக்களை காலனியாதிக்க சக்திகள் கிறித்தவர்களாக ஆக்கினார்கள். நைஜீரியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட சரிபாதியாகவே இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகியது. இரண்டுமே தங்களுடையது மட்டுமே மெய் என்ற ஒற்றை தரிசனம் கொண்ட மதங்கள். எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லாதவை.மரபான மதநம்பிக்கை கொண்ட நைஜீரிய சாதிகள் இன்று உதிரிநாடோடிகளாக வரலாறே இல்லாமல் வாழ்கிறார்கள்.
...
இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை..."

1 comment:

Bhu said...

Sugan
May be you would be interested to read these too http://charuonline.com/blog/?p=340

http://charuonline.com/blog/?p=345